கோயம்புத்தூர்

குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

DIN


காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 20 நாள்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மேட்டுப்பாளையம் அருகே காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர், காமராஜர் நகர், இ.பி.காலனி, பெரிய தொட்டிபாளையம், மணிகண்டன் நகர், கெம்பே கவுடர் காலனி, எஸ்.என்.ஆர்.வி. நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகளில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
இப்பகுதி மக்களுக்கு காரமடை பேரூராட்சி மூலம் மேட்டுப்பாளையம்-கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குழாய்கள் அமைத்து காரமடையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம்-காரமடை இடையே உள்ள சாலை விரிவாக்கப் பணி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியால் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன.
இதனால், கடந்த 20 நாள்களுக்கு மேலாக இப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரமடை  பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் மனோகரன் தலைமையில் கோவை-மேட்டுப்பாளையம் சாலை இடையே காந்தி நகரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் காரமடை காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக குழாய்களை சீரமைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT