உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 95 லட்சம் மானியம் விரைவில் வழங்கப்படும்: வேளாண் இணை இயக்குநர்

கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட 19 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 95 லட்சம்

கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட 19 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 95 லட்சம் மானிய நிதி கூடிய விரைவில் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் பானுமதி தெரிவத்துள்ளார். 
  வேளாண், தோட்டக்கலைத் துறையில் விவசாயிகளை ஒன்றிணைத்து விளைபொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க கூட்டுப் பண்ணையத் திட்டம் 2017 -18 நிதியாண்டில் கொண்டுவரப்பட்டது. இதில், 20 விவசாயிகளை இணைத்து விவசாயிகள் ஆர்வலர் குழுவும், 5 ஆர்வலர் குழுக்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்படும்.  உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒரே பயிர் சாகுபடியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. வேளாண், தோட்டக்கலைத் துறை சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. வேளாண் கருவிகள் வாங்கவும், மதிப்பக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தியை மேற்கொள்ளவும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் சுழல் நிதியும் வழங்கப்படுகிறது.  ஆண்டுதோறும் வேளாண்,  தோட்டக்கலைத் துறையில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் குழுக்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. 
  இது தொடர்பாக வேளாண் இணை இயக்குநர் பானுமதி கூறியதாவது:  கோவை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 95 விவசாயிகள் ஆர்வலர் குழுக்களும்,  அதன் மூலமாக 19 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு, வேளாண் கருவிகள் வாங்குவதற்கான சுழல் நிதி, ரூ. 5 லட்சம் விரைவில் குழுக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாவட்டத்தில் 19 குழுக்களுக்கும் சேர்த்து ரூ. 95 லட்சம் சுழல் நிதி  வழங்கப்படவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com