கீரணத்தத்தில் கை மல்யுத்தப் போட்டி

சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் கை மல்யுத்தப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் கை மல்யுத்தப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கீரணத்தம் ஐ.டி. பார்க் பகுதியில் தமிழ்நாடு ஆர்ம் ரெஸ்ட்லிங் சங்கம், கோவை மாவட்ட ஆர்ம் ரெஸ்ட்லிங் சங்கம் ஆகியவை சார்பில் கை மல்யுத்த போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு ஆர்ம் ரெஸ்ட்லிங் சங்கத்தின் செயலாளர் தினகரன் தலைமை வகித்தார்.  துணைச் செயலாளர் இளமுருகு, கோவை மாவட்டத் தலைவர் பாக்ஸர் பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,  சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கிவைத்தார்.  8 வயது முதல் 12 வயது வரை, 12 வயது முதல் 18 வயது வரை,  18 வயது முதல் 40 வயது வரை, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனிப் பிரிவுகளாகப் போட்டி நடைபெற்றது.
இது குறித்து கோவை மக்களவை உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் கூறியதாவது: வட மாநிலங்களில் மட்டுமே பிரபலமான ஆர்ம் ரெஸ்ட்லிங் எனப்படும் கை மல்யுத்தப் போட்டி  முதல்முறையாக கோவையில் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் தமிழகம்  சார்பாக கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும் என்றார்.
பத்துக்கும் மேற்பட்ட நடுவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள்,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் வீர மரணமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com