டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில்  திறன் மேம்பாட்டு பயிற்சி

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ரெனால்ட் நிஸான் நிறுவனம் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு திறன்

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ரெனால்ட் நிஸான் நிறுவனம் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்தப் பயிற்சியானது மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னை, மதுரை மற்றும் கோவை என மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. 
கோவை மண்டலத்தில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 15இல் துவங்கிய பயிற்சி 26ஆம்தேதி வரை நடைபெறுகிறது. 
நிகழ்ச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேலு துவக்கி உரையாற்றினார். என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி சிறப்புரையாற்றினார். 
அண்ணா பல்கலைக்கழகம் கூடுதல் இயக்குநர் கலைச்செலவன் பயிற்சியின் பயன்கள் குறித்துப் பேசினார். வாகனவியல் துறை இணைப்பேராசிரியர் கார்த்திக்ஜெயராம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com