அத்திக்கடவு கிராமத்தில் காவல் துறை சார்பில் பழங்குடியினருக்கு பொங்கல் பரிசு

மேட்டுப்பாளையம் அருகே  உள்ள அத்திக்கடவு பழங்குடியின கிராமத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் வனப் பொங்கல் விழா,

மேட்டுப்பாளையம் அருகே  உள்ள அத்திக்கடவு பழங்குடியின கிராமத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் வனப் பொங்கல் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காரமடை ஊராட்சி ஒன்றிய மலை அடிவாரப் பகுதிகளில் 40 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. 
இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் இந்து இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். 
பொங்கல் பண்டிகையை ஒட்டி  மாவட்டகாவல் துறையினர் சார்பில் குண்டுர், அத்திக்கடவு, சொரண்டி, கொறவன் கண்டி, கூடப்பட்டி, மானார், வீரக்கல், வேப்பமருதூர் உள்ளிட்ட 30 கிராமங்களில் உள்ள பழங்குடியினர் 750 பேருக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா, வனப் பொங்கல் விழா அத்திக்கடவில் பவானி மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். 
மேற்கு மண்டல நக்ஸல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் முன்னிலை வகித்தார். பழங்குடியின கிராம மக்களுக்கு இலவச வேட்டை, சட்டை, சேலை, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,  4 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. 
 விழவில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு அனைவருக்கும் அன்னதானத்துடன் பொங்கல் வழங்கப்பட்டது.  

பெரியநாயக்கன்பாளையம் உள் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, காரமடை காவல் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com