குறிப்பிட்ட காரணத்துக்காக இட ஒதுக்கீடு தவறானது:கமல்ஹாசன்

குறிப்பிட்ட காரணங்களுக்காக இட ஒதுக்கீட்டுத் திட்டத்தைக் கொண்டுவருவது தவறானது என்று கமல்ஹாசன் கூறினார்.

குறிப்பிட்ட காரணங்களுக்காக இட ஒதுக்கீட்டுத் திட்டத்தைக் கொண்டுவருவது தவறானது என்று கமல்ஹாசன் கூறினார்.
பல்வேறு துறைகளில் சேவை புரிந்த 12 பேருக்கு சான்றோன் விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.  இதற்கு கட்சியின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சிறந்த சேவை அமைப்புகளுக்கும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது பொள்ளாச்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.    
இதில் விருது வழங்கி கமல்ஹாசன் பேசியதாவது: விருது பெற்ற அனைவருமே தன்னலம் இன்றி பல துறைகளில் சேவை புரிபவர்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோர் வாரிசுகளாக அரசியலுக்கு வரமாட்டார்கள். பெயர் தெரியாதவர்கள்தான் கட்சியின் பொறுப்புக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் சிறு, குறு தொழில் தொடங்க இளைஞர்கள் முன் வர வேண்டும். அண்டை மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கி உள்ளது. ஆகவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்றார். 
இதில், மருத்துவர்கள் உத்தர்ராஜ், கண்ணகி உத்தர்ராஜ் ஆகியோருக்கு மருத்துவத் துறைக்காகவும், லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த சமூக நிறுவனத்துக்காகவும்,  கல்கி சுப்ரமணியத்துக்கு சமூக செயற்பாட்டுக்காகவும், தாகம் அமைப்புக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், பியூஜன் டிரஸ்ட்  அமைப்புக்கு இளைஞர் சேவைக்காகவும், இயற்கை விவசாயத்துக்காக மது ராமகிருஷ்ணனுக்கும், பலவகை பயிர் விவசாயத்துக்காக ஓ.வி.ஆர். சோமசுந்தரத்துக்கும், கிராமப்புற வளர்ச்சி உதவிக்காக மணி சுந்தருக்கும், கலை, இலக்கியத்துக்காக கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்துக்கும், கட்டபொம்மன் பன்னாட்டு கலைக் குழுவுக்கு பாரம்பரிய கலைகளுக்காகவும்,  மனித நேயத்துக்காக சந்திரசேகர் சண்முகசுந்தரத்துக்கும், சமூக சேவைக்காக சுகுமாருக்கும் என மொத்தம் 12  சான்றோன் விருதுகளை கமல்ஹாசன் வழங்கினார்.
ஆனைமலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும்,  புரவிபாளையத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்விலும் கமல்ஹாசன் பங்கேற்றார்.
கட்சி அலுவலம் திறப்பு: முன்னதாக, கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொள்ளாச்சிக்கு கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை வந்தார். அன்று மாலை  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், பொள்ளாச்சியில் நடைபெற்ற பலூன் திருவிழாவைப் பார்வையிட்டார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கட்சியின் மேற்கு மண்டலத் தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் புதன்கிழமை காலை பங்கேற்று அலுவலகத்தைத் திறந்துவைத்தார். 
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கு கொடுப்பது எப்படி இலவசமாகும்? மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதற்கு பதில் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட காரணங்களுக்காக இடஒதுக்கீட்டு திட்டத்தை கொண்டுவருவது தவறானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com