பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

போத்தனூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள்  எரிந்து சேதமாகின.

போத்தனூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள்  எரிந்து சேதமாகின.
கோவை, போத்தனூர் அருகே குருசாமிபிள்ளை வீதி குமரன் நகரில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை பிளாஸ்டிக், இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை  வைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக  சின்னதுரை தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணி அளவில்  அவருடைய கடை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.  அங்கு சென்ற கோவை  தெற்கு தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமாகின. 
இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com