கோயம்புத்தூர்

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் மாட்டுப் பொங்கல்

DIN

பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வேளாண்மைக் கல்லூரி,  வேளாண்மை பட்டயப் படிப்பின் ஒரு பகுதியாக விளங்கும் வேளாண் பண்ணையில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
இதற்கு வித்யாலயச் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். பட்டிப் பொங்கல் எனப்படும் பன்னீர், குங்குமம், பால், தயிர், மஞ்சள், ஜலம், காவி, கோமியம், கழுநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் நிரம்பிய பாத்திகளில் அலங்கரிக்கப்பட்ட பசுக்களையும், காளைகளையும் மன்னம் மிதிக்க வைத்து, அவைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பசுக்களுக்கு சுவாமி கரிஷ்டானந்தர், துறவிகள் பொங்கல் ஊட்டினர். கல்லூரி மாணவர்கள் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடினர். விழாவில் வாராணசி ராமகிருஷ்ண சேவாஸ்ரமத்தின் மூத்த துறவி சுவாமி சர்வரூபானந்தர், வித்யாலய உதவிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர், வேளாண் கல்லூரியின் உதவி நிர்வாகத் தலைவர் சுவாமி திவ்ப்ராக்ஞானந்தா, கல்வியியல் புல நிர்வாகி டாக்டர் எஸ்.சங்கரலிங்கம்,  கல்லூரி முதல்வர் மற்றும் டீன் ஏ.ராஜராஜன், வித்யாலய சுவாமிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT