கோயம்புத்தூர்

ஆபாச விடியோ வழக்கு: பொள்ளாச்சியில் கடைகள் அடைப்பு

DIN

ஆபாச விடியோ வழக்கை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி முழுவதும் கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
கடை அடைப்பு போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, பொள்ளாச்சி முழுவதும் கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகம், மருத்துவமனை, சிறிய தேநீர்க் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொள்ளாச்சி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. 
கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் 750 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொள்ளாச்சி காந்தி சிலை, பேருந்து நிலையம், நியூ ஸ்கீம் சாலை, தேர் நிலையம், பல்லடம் சாலை, கோவை சாலை, மகாலிங்கபுரம் ஆர்ச், வெங்கடேசாகாலனி, கடை வீதி, திருவள்ளுவர் திடல் என பல இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT