டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு அருகே குடியிருப்புப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை காலை முதல் காத்திருப்புப்


ஈரோடு அருகே குடியிருப்புப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி, மதரஸா பள்ளிக்கு அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டு, தற்போது வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியில் மக்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மதுக் கடைக்கு மது அருந்த வருவோரால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, இம்மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், வெண்டிபாளையம் சுற்று வட்டார கிராம மக்கள் திரண்டு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி மதுக் கடை முன்பு அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உதவிச் செயலாளர் பி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பழனிசாமி, வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மதுக் கடையின் முன்பு திங்கள்கிழமை இரவு உணவு தயாரித்து போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மதுக் கடைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com