மாநில கையுந்துபந்து போட்டிக்கு அரசுப் பள்ளி அணியினர் தேர்வு

மண்டல அளவிலான கையுந்துபந்து (ஹேண்ட் பால்) போட்டியில், ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி

மண்டல அளவிலான கையுந்துபந்து (ஹேண்ட் பால்) போட்டியில், ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி அணியினர் தங்கம் வென்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மண்டல அளவிலான 17 வயதுக்கு உள்பட்ட மகளிர் ஹேண்ட் பால் போட்டி, நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில்,  ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோபி கல்வி மாவட்ட அணிகள் பங்கேற்றன. 
இறுதிப் போட்டியில், திருப்பூர் அணியுடன் மோதிய ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி அணியினர் 21-6 என்ற புள்ளிக் கணக்கில் திருப்பூர் அணியை வென்று தங்கப் பதக்கம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். 
மாநில அளவிலான குடியரசு தின ஹேண்ட்பால் போட்டிகள் நவம்பர் 16, 17, 18  ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. 
இப்போட்டியில் சிறப்பாக விளையாடி மண்டல அளவில் தங்கப் பதக்கம் வென்றதைப்போல, மாநில அளவில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு பள்ளியில்  தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, இப்பள்ளி அணி மாநில அளவில் 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 2 தங்கப் பதக்கங்களையும், 2013 இல் வெள்ளி, 2015 இல் வெண்கலப் பதக்கத்தையும் வென்று மாநில அளவில் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்த மாணவிகளுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் மோகன், உதவி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர்கள் கோபால், நடராஜ் ஆகியோர் ஊக்கமளித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com