செங்குந்தர் பள்ளியின் பவள விழா நாளை தொடக்கம்

ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பவள விழா வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது. 

ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பவள விழா வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது. 
இதுகுறித்து, செங்குந்தர் கல்விக் கழகச் செயலாளர், தாளாளர் எஸ்.சிவானந்தன் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாநகரில் கடந்த 75 ஆண்டுளாக கல்வி சேவையாற்றி வரும் செங்குந்தர் கல்விக் கழகம், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பவள விழா நவம்பர் 16, 17, 18 ஆகிய 3 நாள்கள் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், மாநில அமைச்சர்கள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசன் ஜெகதீசன்  உள்ளிட்ட சான்றோர், சுகிசிவம், பேராசிரியை ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன், கல்வித் துறை உயர் அதிகாரிகள், ஈரோடு மாநகர தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு நாள் மாலை வேளைகளிலும் செங்குந்தர் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், சிரிப்பரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும்,  சிறப்புப் பேச்சாளர்களின் உரை வீச்சு, நிறைவு நாளில் விஜய் டிவி பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வென்ற கணேஷ்-ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல், பாரம்பரிய கலை நிகழ்ச்சியும்  நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com