ஈரோடு

அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆலோசனைக் கூட்டம்

DIN

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான அனைத்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு, தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்டக் குழுச் செயலாளர் ஜே.சுந்தரம் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி  பங்கேற்றுப் பேசுகையில், அக்டோபர் 28 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழிலாளர் சம்மேளனங்களின் தேசிய மாநாட்டு முடிவுகளையும், அவற்றை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்தும் குறிப்பிட்டார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தல். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர்களுக்கு எதிராக திருத்துவதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியத்தை உருவாக்கி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ. 21 ஆயிரம்  நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 6,000 வழங்க வேண்டும். ஒப்பந்தம், குறிப்பிட்ட கால வேலை முறைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழிலாளர் சம்மேளனங்களின் தேசிய மாநாட்டு முடிவை ஏற்பது எனவும் முடிவு செய்யப்பட்டு, ஈரோடு பெரியார் மன்றத்தில் நவம்பர் 28 இல் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை  நடத்துவது எனவும் ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதில், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் வெங்கடாசலம், சித்தையன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிர்வாகிகள் கோவிந்தராஜ், மணி, சி.ஐ.டி.யூ. நிர்வாகி பொன்பாரதி, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி  கே.ஆர்.தங்கராஜ், எச்.எம்.எஸ். நிர்வாகி ஜீவா சண்முகம், எம்.எல்.எப். நிர்வாகி காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT