ஈரோடு

தொற்று நோய் பாதிப்பு: 2 வாரங்களுக்கு சந்தைகளில் மாடுகள் விற்பனைக்குத் தடை

DIN


ஈரோடு மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதாலும், பனிப் பொழிவு அதிகம் இருப்பதாலும் கால்நடைகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 2 வாரங்களுக்கு பின் வரும் சந்தைகளில் மாடுகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம், அந்தியூர், சீனாபுரம், மொடச்சூர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கால்நடைச் சந்தைகளுக்கு வெளியூர்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒரு கால்நடையில் இருந்து மற்ற கால்நடைகளுக்குத் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. கால்நடைச் சந்தைகளில் இருந்து தொற்று நோய் உள்ள கால்நடைகளை வாங்கிச் செல்லும்போது, அவர்களிடம் நல்ல நிலையில் உள்ள கால்நடைகளுக்கும் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே, தொற்று நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு மேற்கண்ட கால்நடைச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT