செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்

DIN | Published: 12th September 2018 07:08 AM

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு வ.உ.சி. விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இம்முகாமை, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் தலைமை வகித்து தொடக்கிவைத்தார். இதில், புதிய விளையாட்டுப் போட்டிகளான பாக்சிங் (குத்துச் சண்டை), துப்பாக்கி சுடுதல், டேக்குவாண்டா, மல்யுத்தம், சைக்கிளிங் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.    
 இப்போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்ற போட்டியாளர்கள், சிறந்த பயிற்றுநர்கள் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், புதிய விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல், போட்டிகளில் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், போட்டியின் விதிமுறைகள் குறித்தும், விளையாட்டுப் போட்டிகளின்போது மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
 இந்த புத்தாக்கப் பயிற்சி முகாமில் 50 க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் கலந்துகொண்டனர். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த முகாம்  செப்டம்பர் 12 இல் நிறைவடைகிறது.
 

More from the section

சென்னிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்
மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
3 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நிரம்பி வரும் பெரும்பள்ளம் அணை
மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
ஈரோட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள 80 அடி சாலையைத் திறக்கக் கோரிக்கை