புதன்கிழமை 14 நவம்பர் 2018

மின்னல் தாக்கியதில் சத்துணவு சமையலர் சாவு

DIN | Published: 12th September 2018 01:19 AM

சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தில் திங்கள்கிழமை இரவு இடியுடன் மின்னல் தாக்கியதில் சத்துணவு சமையலர் பிரியா உயிரிழந்தார்.
 சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரியா (30), பசுவாபாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வந்தார். பிரியா திங்கள்கிழமை இரவு தோட்டத்தில் பூப்பறிப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது.
செடியில் பறித்த பூக்களை எடுத்து வந்தபோது இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
மின்னல் தாக்கியதில் அவரது செல்லிடப்பேசியும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் பிரியாவைத் தேடியுள்ளனர். 
அப்போது, பிரியா தோட்டத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அவரை சோதனையிட்டபோது மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரியவந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

More from the section

சென்னிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்
மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
3 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நிரம்பி வரும் பெரும்பள்ளம் அணை
டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி காத்திருப்புப் போராட்டம்
மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்