ஈரோடு மொத்த மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோட்டில் உள்ள மளிகைப் பொருள் மொத்த விற்பனை நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்

ஈரோட்டில் உள்ள மளிகைப் பொருள் மொத்த விற்பனை நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், திலகர் வீதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (46). இவர், வீரப்பன்சத்திரம், பெரியகுட்டை வீதியில்  மளிகைக் கடை மொத்த விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.
இவரது கடை அருகிலுள்ள கிடங்கில்  தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கலைவாணி தலைமையிலான குழுவினர் அங்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, அந்தக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கி.கி. எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்தக் கடைக்கான உணவுப் பாதுகாப்பு உரிமத்தை ரத்து செய்து கிடக்குக்கு "சீல்' வைத்துச்சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com