அஞ்சல் துறை சார்பில் ஓவியப் போட்டி: செப்டம்பர் 22 க்குள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் வெளியிட்ட தகவல்:
இந்திய அஞ்சல் துறையின் மேற்கு மண்டல அளவிலான தபால் தலை கண்காட்சி (நஅகஉஙடஉல-18) சேலம், அம்மாபேட்டை,  வைஷ்யா மஹாலில் அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அஞ்சல் துறை சார்பில் "தமிழகத்தில் காந்தியும், விடுதலை இயக்கமும்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியமானது சேலத்தில் நடைபெற உள்ள தாபல் தலை கண்காட்சியில் சிறப்பு தபால் உறையாக வெளியிடப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள்:
அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். நுழைவுக் கட்டணம் இல்லை. ஏ-4 அளவு பேப்பர் அல்லது கேன்வாஸ் அட்டையில் வாட்டர் கலர், ஸ்கெட்ச், ஆயில் பெயிண்டிங் பயன்படுத்தி தங்களது கற்பனைத் திறனில் வரைய வேண்டும். ஓவியத்தின் பின்புறத்தில் பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்லிடப்பேசி எண் குறிப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆறுமுகம், போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர், மேற்கு மண்டல தபால் நிலையம், கோவை - 641002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் ஓவியத்துக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரமும், 5 பேருக்கு தலா ரூ. 1,000 ஆறுதல் பரிசும் அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0424-2227077, 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com