ஈரோடு

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

DIN

விளாமுண்டி வனப் பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகையைப் பறித்துச் சென்ற இருவரை பவானிசாகர் போலீஸார் கைது செய்தனர்.
 திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (37), தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா(30). இவர், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக புளியம்பட்டி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். மீண்டும் திருப்பூர் செல்ல வழிதெரியாமல் வேறு பேருந்தில் ஏறிய அவர் பவானிசாகர் நால்ரோட்டில் இறங்கியுள்ளார். பின்னர், வீடு திரும்பிச் செல்வதற்காக விளாமுண்டி வனப்பகுதி வழியாக தனியாக நடந்து சென்றுள்ளார்.
 அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நிர்மலாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி  4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். உடனடியாக, நால்ரோடு பகுதி பொதுமக்களுக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பவானிசாகர் போலீஸில் ஒப்படைத்தனர்.    
 விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் கெளதம் (27), பின்னால் அமர்ந்திருந்தவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் திருமாந்துரையைச் சேர்ந்த சிவமணி மகன் மகேஸ்வரன் (24) என்பதும், இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.
 இதுகுறித்து, நிர்மலா அளித்த புகாரின்பேரில் பவானிசாகர் போலீஸார் இருவரையும் கைது  செய்து சத்தி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT