பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் ஆறுதல்

பவானி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அமைச்சர்


பவானி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்த பெரிய அம்மணி, சரசாள், வசந்தா உள்ளிட்ட 13 பெண்கள் பவானி ஆற்றைக் கடந்து விவசாயப் பணிக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி சென்றனர். அங்கு பணி முடிந்துவிட்டு 13 பேரும் மீண்டும் ஆலத்துக்கோம்பைக்கு திரும்புவதற்கு பவானி ஆற்றைக் கடந்தனர்.
அப்போது, நீரின் வேகம் காரணமாக 13 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். அதில், உயிருக்குப் போராடிய 10 பேரை கிராம மக்கள் மீட்டனர். பெரிய அம்மணி, சரசாள், வசந்தா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பவானிசாகர் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் ஆலத்துக்கோம்பை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரண நிதியாக அமைச்சர் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ரூ. 10 ஆயிரத்தை வழங்கினார். மேலும், அவர்களின் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com