புதுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம்

ஈரோடு அருகே உள்ள புதுப்பாளையத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஈரோடு அருகே உள்ள புதுப்பாளையத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, கே.வி.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்து, 158 பயனாளிக்கு ரூ. 1.06 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களைத் தகுதியான பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் கிராமங்களில் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு எடை அளவு பார்த்தல், எடை குறைபாடு இருந்தால் ஊட்டச்சத்து மூலம் மேம்படுத்த முயற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் வீடு இல்லாதவர்கள், புறம்போக்கில் வசிப்போருக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டு, வீட்டுமனைப் பட்டா உள்ளோருக்கு வீடு வழங்கும் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. மனுக்கள் வழங்கிய தகுதியான மக்களுக்கு விரைவில் வீடு வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, குடிநீர் வசதி செய்து தருதல் என 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இதில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், வட்டாட்சியர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com