புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஈரோட்டில் கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், அக்ரஹார வீதி அய்யர் பெருமாள் கோயில்,


ஈரோட்டில் கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், அக்ரஹார வீதி அய்யர் பெருமாள் கோயில், காவிரிக் கரை ஆதவன் மாதவன் கோயில், பெருமாள் மலைக் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் திருமஞ்சனம், கோ பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி கோயில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரையும், கமலவல்லி தாயாரையும் தரிசனம் செய்தனர்.
விழா மண்டபத்தில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளிய கஸ்தூரி அரங்கநாதர் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வசதிக்காக நிழல் தரும் மேற்கூரையும், வரிசை சாரமும் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், திருப்பதி கோயிலில் உள்ளதுபோல் பக்தர்கள் கோரிக்கை, வேண்டுதல் வைத்து காணிக்கை செலுத்தும் ஸ்ரீவாரி உண்டியல்கள் மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
 புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சென்னிமலை, மேலப்பாளையம், ஆதிநாராயணப் பெருமாள் அலமேலுமங்கை - நாச்சியார் அம்மை உடனமார் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. ஆதிநாராயணப் பெருமாள், அலமேலுமங்கை - நாச்சியார் அம்மையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, பெருந்துறை, கோட்டைமேடு, ஸ்ரீதேவி பூதேவி உடனமார் வெங்கட்டரமண சுவாமிகள் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. வெங்கட்டரமண சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ரங்கநாதருக்கு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றன. நின்ற, அமர்ந்த, படுத்த என மூன்று நிலைகளில் உள்ள மூலவருக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. பாமா ருக்குமணியுடன் மூலவர் புல்லாங்குழல் அலங்காரத்தில் காட்சியளித்தார். லட்சுமி நாராயண சுவாமிக்கு மலர், துளசியால் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சத்தி கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com