நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில், 9 ஆவது தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில், 9 ஆவது தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.
மெக்ஸிகோ மின்ட் ஸ்ட்ராட்டஜிக் நிறுவன முதன்மை அதிகாரி டாக்டர் த.விஜேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். கணினி அறிவியல் துறை மாணவி  பூமா விழாவைத் தொடக்கிவைத்தார்.
தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் ஆறுமுகம் கருத்தரங்கின் மூலம் புதிய முயற்சிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து விளக்கமளித்தார். செயலர்கள் ச.நந்தகுமார் பிரதீப், ச. திருமூர்த்தி, முதல்வர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் 53 க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து 241 மாணவர்கள் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை மாணவர் ஆரோன் டி சஞ்சு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com