கோணவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு கோணவாய்க்கால் அருள்மிகு கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் ஆலய சித்திரை குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். 


ஈரோடு கோணவாய்க்கால் அருள்மிகு கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் ஆலய சித்திரை குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். 
ஈரோடு கோணவாய்க்கால் அருள்மிகு கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயிலில் சித்திரை குண்டம் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா பூச்சாட்டுதலுடன் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, சனிக்கிழமை வாஸ்துசாந்தி, ஞாயிற்றுக்கிழமை கிராமசாந்தி, அக்னிகுண்டம் சுத்தம்செய்தல், செவ்வாய்கிழமை பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்துவந்து அபிஷேக பூஜையும், புதன்கிழமை மாலை 5 மணிக்கு அக்னி கபாலம் பற்றவைத்தல், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சீதாளதேவி யாகம், பகல் 11மணிக்கு அம்பாளுக்கு சகலதிரவிய அபிஷேகமும், 12 மணிக்கு மகாபூர்ணாஹுதியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு கோயில் பூசாரி மாது குண்டம் இறங்கினார். அவரைத்   தொடர்ந்து, பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர். 
சனிக்கிழமை காலை முதல் பொங்கல் விழாவும், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை திரவிய மலர் அபிஷேகத்தை தொடர்ந்து மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com