மாநில விளையாட்டுப் போட்டியில் கொங்கு பாலிடெக்னிக் சாம்பியன்

மாநில ஐபிஏஏ போட்டிகள் கோவை கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. 

மாநில ஐபிஏஏ போட்டிகள் கோவை கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. 
இப்போட்டியில், மண்டல அளவில் 11 பாலிடெக்னிக் கல்லூரிகள் கலந்துக் கொண்டன. இதில், பெருந்துறை  கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் அணி வாலிபால் போட்டியில் தங்கப் பதக்கமும், த்ரோபால், டேபிள் டென்னிஸ் மற்றும் கைப்பந்துப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றது. 
இக்கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவி கே. ராசிகா, 1500 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றார். முதலாமாண்டு கணிப் பொறியியல் மாணவி டி. உஷாராணி, 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றதோடு, நீளம் தாண்டுதலில் நான்காவது பரிசைப் பெற்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3ஆம் ஆண்டு மாணவி கே. ராசிகா, 2ஆம் ஆண்டு கணிப் பொறியியல் மாணவியர் அனிதா பெட்ரிசியா, கே. கோமதி, முதலாமாண்டு மாணவியர் டி. உஷாராணி மற்றும் என். ஷர்மிளா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். குண்டு எறிதலில் டி. சிந்துமொழி நான்காவது பரிசு பெற்றார். தடகளம் மற்றும் குழுப் போட்டிகளில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றனர். மேலும், பேட்மிண்டன், வாலிபால், டேபில் டென்னிஸ் மற்றும் தடகள போட்டிகளில் தென்மண்டல அளவில் விளையாட தேர்வாகியுள்ளனர். 
வெற்றிப் பெற்ற மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர்  கே.எம்.பிரகாஷ்ராஜ், உதவி உடற்கல்வியாளர் பி.மூர்த்தி ஆகியோரை கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, முதல்வர் வி.வேதகிரீஸ்வரன், துணை முதல்வர் டி.தாமோதரன் மற்றும் துறைத் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com