ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலம்,  புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு, வைராபாளையம் பகுதி ஸ்ரீகற்பகவிநாயகர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை வகித்து மறைந்த ராணுவ வீரர்களின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 
இதில் சங்கத் தலைவர் வெற்றிவேல், துணைத் தலைவர் நந்தகுமார், கெளரவத் தலைவர்கள் ரவி, கதிர்வேல், வைராபாளையம் மாது உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திண்டலில் நடந்தது. இதற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமை வகித்து ராணுவ வீரர்களின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  
இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் மணிகண்டன், வழக்குரைஞர் சித்ரா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கார்த்தி, பிலோமினாள், பொதுச்செயலர்கள் பிரிட்டோ, ஜோஸ்வா, பிரேம்ஆனந்த், மனோஜ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com