ஈரோடு

கோடைக் கால ஆடைகள் விற்பனை துவக்கம்

DIN

கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகளின் விற்பனை தொடங்கியுள்ளது.
ஈரோடு ஜவுளிச் சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். ஜவுளி வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வருகின்றனர்.
 குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான ஆடைகள், வீட்டு உபயோகத்துக்குத் தேவையான அனைத்து வகையான துணிகளும் இங்கு கிடைக்கின்றன. 
குளிர்காலம் முடிந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மந்தமாக இருந்த ஜவுளிச் சந்தையின்  விற்பனை இந்த வாரத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 
கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் பருத்தி ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.    
இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எ.செல்வராஜ்  கூறியதாவது:
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த வாரம் ஜவுளிச் சந்தையில் பருத்தி சேலைகள், பருத்தி சுடிதார்கள், குழந்தைகளுக்குப் பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளின் விற்பனை அதிகமாக இருந்தது. இங்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் பருத்தி ஆடைகளையே அதிகம் வாங்கிச் சென்றனர். பனியன் துணிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அதிகம் விற்பனையாயின. சந்தைக்கு கொண்டுவரப்பட்ட துணிகளில் 40 சதவீதம் அளவுக்கு விற்பனை இருந்தது. 
இந்த விற்பனை வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கும்; வரும் வாரங்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கான ஆடைகள் ரூ.75 முதல் ரூ.150 வரையும், நைட்டி ரகங்கள் ரூ.110 முதல் ரூ.200 வரையும் விற்பனையானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT