பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கேலி வதைத் தடுப்பு விழிப்புணர்வு

பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கேலி வதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கேலி வதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் மருத்துவர் ஏ.சந்திரபோஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ராஜாகுமார் பங்கேற்றுப் பேசுகையில், கேலி வதை செய்யப்படும் மாணவர்களின் மனநிலை பாதிப்பதுடன், அவர்களது கல்வியும் பாதித்து எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. அவர்களை நம்பி உள்ள அவர்களது பெற்றோரும், குடும்பமும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றார். 
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் எம்.ராஜேந்திரன் பேசியதாவது:
கல்லூரியில் கேலி வதை நடைபெறா வண்ணம் மாணவ, மாணவிகளிடம் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. மூத்த பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு எந்த ஒரு மாணவரேனும் கேலி வதையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதுடன், இந்திய மருத்துவக் குழுமத்தின் அறிவுரைப்படி, விடுதியைவிட்டு வெளியேற்றுதல், பாட வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி மறுப்பு, காவல் துறையில் புகார் செய்தல் போன்ற உயர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதில், கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ். செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.சண்முகசுந்தரம், உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com