பொங்கல் பண்டிகை: கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசக் கூடாது

பொங்கல் பண்டிகை கொண்டாடும்போது கால்நடைகளின் கொம்புகளுக்கு செயற்கை வர்ணம் பூசுவதைத்

பொங்கல் பண்டிகை கொண்டாடும்போது கால்நடைகளின் கொம்புகளுக்கு செயற்கை வர்ணம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. 
சித்தோட்டை அடுத்த செம்பூத்தாம்பாளையம் கிராமத்தில் கால்நடைகளுக்கான பாரம்பரிய சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, அறக்கட்டளை நிர்வாகத் தலைவர் கே.வி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.லோகநாதன் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் மூலிகை மசால் உருண்டைகளை வழங்கினார். அறக்கட்டளை இயக்குநர் ஜி.ஜெயலட்சுமி வரவேற்றார். புல்லர்ட்டான் இந்தியா கிரெடிட் நிறுவன மேலாளர் ஆர்.நரேஷ்குமார், உதவி மேலாளர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில், 142 கால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டைகளும், 202 ஆடுகளுக்கு மூலிகை குடற்புழு ஊக்க மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு மூலிகை மருந்து உருண்டைகள் கொடுப்பதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி தொற்றுநோய்கள் தாக்காது என முகாமில் தெரிவிக்கப்பட்டது. 
தொடர்ந்து, நிர்வாகத் தலைவர் கே.வி.கோவிந்தராஜ் பேசியதாவது:
பொங்கல் பண்டிகையில் குப்பை போன்றவற்றோடு டயர், பிளாஸ்டிக் பொருள்கள், குடம் போன்றவற்றை எரிக்க வேண்டாம். அப்படி எரிக்கும்போது காற்றில் நஞ்சு கலந்து மூச்சுவிடக்கூட முடியாத நிலை உருவாவதுடன் பூமியும் வெப்பமாகிறது. மாட்டுப் பொங்கலின்போது கால்நடைகளின் கொம்புகளை கூரிய ஆயுதம் கொண்டு சீவிவிட்டு பெயிண்டுகளைப் பயன்படுத்தி வர்ணம் பூசக் கூடாது. இவ்வாறு கொம்புகளுக்கு பெயிண்ட் பூசுவதால் சூரிய சக்தியை கிரகிக்கும் தன்மையை மாடு இழந்து விடுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com