ஈரோடு

சென்னிமலையில் அரசு நெல் கொள்முதல்  நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

சென்னிமலை பகுதியில், தற்போது நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளதால் உடனடியாக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சென்னிமலையை அடுத்த, பசுவபட்டி மற்றும் வாய்க்கால்புதூர் பகுதியில், 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடம் இருந்து, உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் வெளி வியாபாரிகளிடம் நெல்லை விற்று வந்த விவசாயிகளுக்கு, கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைத்தது. மேலும், உடனுக்குடன் பணமும் கிடைத்து. 
இந்த நிலையில், தற்போது, சென்னிமலை பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமாக தொடங்கியுள்ளது. ஆனால், பசுவட்டி மற்றும் வாய்க்கால்புதூர் பகுதியில், இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்காததால், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமல் போய்விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: 
கடந்த சில ஆண்டுகளாக பசுவபட்டி, வாய்க்கால்புதூர் பகுதியில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. இந்தக் கொள்முதல் நிலையத்தில், சுற்றுவட்டார ஊர்களான எக்கட்டாம்பாளையம், எல்லைக்கிராமம், பரஞ்சேர்வழி, மறவபாளையம், பசுவபட்டி கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளையும் நெல்லை விற்பனை செய்தனர். நெல்லுக்கு கூடுதல் விலையும் கிடைத்தது. 
மேலும், வெளி வியாபாரிகளுக்கு நெல்லை விற்பனை செய்தால், பல நாள்கள் கழித்துதான் பணம் கொடுக்கின்றனர். அதனால், பசுவபட்டி, வாய்க்கால்புதூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT