4 நாள்களில் ரூ.10.93 லட்சம் பறிமுதல்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ. 10.93 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர்


ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ. 10.93 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ. 2.34 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்ததாவது:
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்த தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. 
பறக்கும் படை குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டும், முக்கியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. 
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த சோதாசெட்டி என்பவரிடம் ரூ.64,200, 13ஆம் தேதி கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவரிடம் ரூ.5,84,500, 14ஆம் தேதி தாளவாடி கல்மாண்டிபுரம் சித்துராஜ் என்பவரிடம் ரூ.1,00,000, சத்தியமங்கலம் கோபி சாலை கே.செந்தில்நாதன் என்பவரிடம் ரூ.70,000, 15ஆம் தேதி சாம்ராஜ்நகர் பரமசிவமூர்த்தி என்பவரிடம் ரூ.2,75,100 என மொத்தம் ரூ.10,93,800 பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 
பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் சித்துராஜ், செந்தில்நாதன் மற்றும் சோதாசெட்டி ஆகியோரின் ரூ.2,34,200 தொகைக்கான ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதின் அடிப்படையில் சனிக்கிழமை மாலை அந்தத் தொகை அவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com