பூதப்பாடியில் ரூ.10 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பவானி அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பவானி அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இங்கு, 23,478 தேங்காய்கள் விற்பனைக்கு வந்ததில் சிறியவை ரூ.5.60 முதலும், பெரியவை ரூ.15 வரையில் என மொத்தம் ரூ.2,54,683 க்கும், 49 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.68.85 முதல் ரூ.87.49 வரையில் என மொத்தம் ரூ.50,028 க்கும், 271 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ.43.60 முதல் ரூ.53 வரையில் என மொத்தம் ரூ.4,63,882 க்கும், 78 மூட்டைகள் நெல், கிலோ ரூ.13 முதல் ரூ.18 வரையில் என மொத்தம் ரூ.86,473 க்கும் ஏலம் போனது.  
 8 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ.21.09 வீதம் ரூ.18,074 க்கும், 17 மூட்டைகள் எள், கிலோ ரூ.113.09 முதல் ரூ.120.16 வரையில் என மொத்தம் ரூ.1,23,895 க்கும், 3 மூட்டைகள் ராகி கிலோ ரூ.18.39 முதல் ரூ.22.16 வரையில் என மொத்தம் ரூ.5,060 க்கும் ஏலம் போனது. மொத்தம் 426 மூட்டைகளில் 344.78 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.10,02,035 க்கு ஏலம் போயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com