ஈரோடு

மத்திய பாஜக ஆட்சியில் விவசாயம், தொழில் துறைகள் பாதிப்பு: கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன்

DIN

பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டால் விவசாயம், தொழில் துறைகள் பாதிப்படைந்துள்ளதாக திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார். 
 பவானி, அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் பேசியதாவது:
 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தை மீறி மனுதர்ம முறையிலான அரசியல் சட்டத்தை அமல்படுத்தும் ரகசியத் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதனால், இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுக்க பாஜகவை வீழ்த்த வேண்டும். 
 பாஜக ஆட்சியில் விவசாயத் தொழில் நலிவடைந்ததால் வேலை தேடி பலர் கிராமங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர். கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
 உள்நாட்டில் விவசாயத்தை அழித்து, வெளிநாட்டில் இருந்து விவசாய உற்பத்திப் பொருளை விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். அனைத்துத் துறைகளும் தனியார் மயமாக்கப்படுவதால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வேலையிழப்பு அதிகரித்து வருகிறது.
 பவானியின் உயிர்நாடியான கைத்தறி ஜமக்காள உற்பத்தித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு நசிந்து வருகிறது. தமிழக அரசும் கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. சாயக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் மண்வளம், நீர்வளம், தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 மக்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளைப் புறந்தள்ளிவிட்டு சுயநலனுக்காக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை அகற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
 இக் கூட்டத்தில் திமுக நகரச் செயலர் ப.சீ.நாகராஜன், ஒன்றியச் செயலர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், துரைராஜ், கம்யூனிஸ்ட் நகரச் செயலர் பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் எஸ்.மாணிக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் வள்ளுவன், தமுமுக மாவட்டச் செயலர் முகமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலர் பி.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT