தாளவாடியில் முட்டைகோஸ் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தாளவாடியில் முட்டைகோஸ் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.3 க்கு விற்கப்பட்ட கோஸ் தற்போது ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

தாளவாடியில் முட்டைகோஸ் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.3 க்கு விற்கப்பட்ட கோஸ் தற்போது ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் அருள்வாடி, திகினாரை, தொட்டகாஜனூர், ஜீரஹள்ளி, மல்லன்குழி, தொட்டபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலைக்காய்கறி சாகுபடிக்கான சீரான வெப்ப நிலை நிலவுவதால் பீன்ஸ், காலிஃபிளவர் மற்றும் முட்டைகோஸ் சாகுபடி செய்து வருகின்றனர்.  இப்பகுதியில் போதி மழைப் பொழிவு இல்லாத நிலையில் சொட்டுநீர் பாசனம் மூலம் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளனர். கடந்த ஒராண்டாக கோஸ் விலை சரிந்து காணப்பட்டதால் சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைவாக கோஸ் பயிரிட்டனர். 3 மாதப் பயிரான முட்டைகோஸ் உற்பத்தி செய்ய ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது.
 தற்போது ஏக்கர் ஒன்றுக்கு மகசூல் 12 டன் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே முட்டைகோஸ் விலை கிலோ ரூ.3 ஆக சரிந்து அதே விலை நீடித்தது.
 தற்போது முட்டைகோஸ் விலை கிலோ ரூ.20 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு விளையும் முட்டைகோஸ்களை மேட்டுப்பாளையம், ஈரோடு, கோவை மற்றும் கேரளத்துக்கு வாகனம் மூலம் அனுப்பப்படுகிறது. கேரள வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து கோஸ் கொள்முதல் செய்து வருவதால் கோஸூக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com