8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார். 


ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார். 
ஈரோடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிரித்து வழங்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சி.கதிரவன் பணியை துவக்கிவைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையை பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதன்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 237 வாக்குப் பதிவு மையங்களுக்கு 848 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 298 வாக்குப் பதிவு மையங்களுக்கு 1,086 வாக்குப் பதிவு இயந்திரங்கள், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 275 வாக்குப்பதிவு மையங்களுக்கு 1,001 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 263 வாக்குப் பதிவு மையங்களுக்கு 959 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 
பவானி  சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 289 வாக்குப் பதிவு மையங்களுக்கு 1,053 வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 261 வாக்குப் பதிவு மையங்களுக்கு 952 வாக்குப் பதிவு இயந்திரங்கள்,  கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 296 வாக்குப் பதிவு மையங்களுக்கு 1,080 வாக்குப் பதிவு இயந்திரங்கள், பவானிசாகர் சட்டப்பேரவைத்  தொகுதியில் உள்ள 294 வாக்குப் பதிவு மையங்களுக்கு 1,071 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 
இதன் மூலம் மொத்தம் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,213 வாக்குப் பதிவு மையங்களுக்கு, 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரவிசந்திரன் உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com