ஈரோடு

பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா

DIN


சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பிரிவு உபசார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரி ஆலோசகர் எம்.பி.விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் இந்திய அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெங்களூரு அக்சென்சர் மென்பொருள் நிறுவனத்தின் மேலாளர் குயின்சிங் ஜேனர் பரிசு வழங்கி பேசியதாவது:
 உண்மை பேசுவதிலும், நேர்மையாக நடப்பதிலும் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். மாணவர்கள் கற்றிந்த அறிவாற்றலை அனுபவமாக மாற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்துக்குப் பெருமையை பெற்றுத்தர வேண்டும். இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இளம் பொறியாளர் இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.
 இதில் கல்லூரி முதல்வர் சி.பழனிச்சாமி, கல்விப் பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறைத் தலைவர் பி.தங்கராஜ், மின்னியல் மற்றும் கருவியல் துறைத் தலைவர் சி.கணேஷ்பாபு மற்றும் பேராசியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT