ஈரோடு

பெருந்துறையில் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை ஏலம்

DIN


பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1 கோடியே  65 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.                              
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 4, 036 மூட்டைகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.91.65 க்கும், அதிகபட்சமாக ரூ.99.15 க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.41க்கும், அதிகபட்சமாக ரூ.90.95 க்கும்  விற்பனையானது. மொத்தம் ரூ.ஒரு கோடியே  65 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
அவல்பூந்துறையில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்மொடக்குறிச்சி, மார்ச் 23: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு  கொப்பரை ஏலம் நடைபெற்றது. 
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 744 மூட்டைகளில் 35 ஆயிரத்து 798 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தர கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.98.75 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.92.75 க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.83.10 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.50.65 க்கும் என மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
இதேபோல, 6,141 கிலோ எடையுள்ள 16,516 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரத்து 460 ம், குறைந்தபட்சமாக டன் ஒன்றுக்கு ரூ. 24 ஆயிரத்து 100 என மொத்தம் ரூ.ஒரு லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
 தேங்காய் ஒன்றுக்கு ரூ.5.12 முதல் ரூ.17.02 வரை ஏலம் நடைபெற்றது என விற்பனைக் கூட கண்காணிப்பாளர் இரா.சதீஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT