கூடலூர் நகரில் சாலைத் தடுப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை

கூடலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து

கூடலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  கூடலூர் நகரில் குறுகிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மையத் தடுப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வியாபாரிகள்,பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது 
வழக்கமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் வங்கிகள்,   ஏடிஎம் மையங்கள், கடைவீதி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சாலையைக் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.  ஆட்டோ, தனியார் வாகனங்கள், சுற்றுலா வாகனங்களைக் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முடிவதில்லை.
    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தரப்பிலிருந்தும் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், கோட்டாட்சியர் முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. திராவிடமணி, டி.எஸ்.பி.ஜெய்சிங், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
  இதில், சாலைத் தடுப்புகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்வதற்கு ஏற்ப சாலைத் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ.திராவிடமணி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com