செவ்வாய்க்கிழமை 13 நவம்பர் 2018

ஓவேலி வனப் பகுதி பழங்குடி மக்களிடம்  குறைகளைக் கேட்டறிந்த காவல் துறையினர்

DIN | Published: 12th September 2018 05:22 AM

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியிலுள்ள பழங்குடி மக்களிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை குறைகளைக் கேட்டறிந்தனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவின்பேரில்,   காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் ஓவேலி எல்லமலைப் பகுதியிலுள்ள குறும்பர்பாடி பழங்குடிக் கிராமத்தில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். 
நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதியிலுள்ள குறைகளை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில்,  நியூஹோப் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ்,  உதவி ஆய்வாளர் ராஜாமணி,  தனிப் பிரிவுக் காவலர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

தபால் நிலையம் மூலமாகச் சம்பளம் பெறும் வெளி மாநிலத் தொழிலாளர்கள்
உதகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 146 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு
சாலையோர முட்புதர்களை அகற்றிய போக்குவரத்துக் காவலர்கள்
கூடலூரில்என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
மசினகுடியில் பழங்குடியினருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட முகாம்