வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

கோத்தகிரியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 05:23 AM

கோத்தகிரியில் பாஜக நிர்வாகிகள்,  புதிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு,  அக்கட்சியின் மாவட்டச்  செயலாளர் குமார் தலைமை  வகித்தார். மாநில இளைஞரணி பொறுப்பாளர் பிரதீப் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில்,  கட்டபெட்டு-கோத்தகிரி சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் வேகத் தடை, சாலையோர தடுப்பு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்,  கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிந்து  அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், புதிய பொறுப்பாளர்களான மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் லாலாஜி,  செயலாளர்கள் சரவணன், சதீஷ்,  நகரத் தலைவர் முருகேஷ்,  ஒன்றியத் தலைவர் கார்த்திக் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். 
கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் அம்பிகை கணேசன்,  அருண்,  ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

More from the section

முக்குருத்தி காப்புக்காடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கோத்தகிரியில் மின் மயானம்: நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்
ஓவேலி பகுதியில் யானை தாக்கியதில் வீடு சேதம்
காட்டுப் பன்றி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்
மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் கவனத்துக்கு...