நீலகிரி

இந்திய ரயில்வே சுற்றுலா வாரம் உதகை-கேத்தி இடையே இன்று சிறப்பு மலை ரயில் இயக்கம்

DIN


இந்திய ரயில்வேயின் சுற்றுலா வாரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (செப். 23) உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
அகில இந்திய அளவில் மத்திய அரசின் சார்பில் சுற்றுலா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், இந்திய ரயில்வே சார்பில், கடந்த 16-ஆம் தேதி முதல் சுற்றுலா வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் இந்திய ரயில்வேயும் பங்கேற்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16-ஆம்தேதி உதகை-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு மலை ரயிலில் இரண்டு முதல் வகுப்புப் பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டி ஆக மொத்தம் 3 பெட்டிகளுடன், 120 பயணிகள் சென்று வரும் வகையில், உதகையில் இருந்து கேத்திக்கு இரு முறை இந்த மலை ரயில் சென்று வந்தது. அதைப் போலவே இந்த வாரத்திலும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 23) இச்சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
உதகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு புறப்படும் ரயில், காலை 10.11 மணிக்கு லவ்டேல் நிலையத்தை சென்றடைந்து, 10.30 மணிக்கு கேத்தியை சென்றடைகிறது. அங்கு அரை மணி நேரம் நிற்கும் ரயில், 11 மணிக்கு கேத்தியிலிருந்து புறப்பட்டு, 11.30 மணிக்கு உதகையை வந்தடைகிறது. அதைப்போலவே பிற்பகலில் 2.30 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு, 3 மணிக்கு கேத்தியை சென்றடைகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு கேத்தியிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு உதகையை வந்தடைகிறது.
சிறப்பு ரயிலில் பயணம் செய்வோருக்குப் பரிசு:
இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு ரூ.400ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ.300ம் கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.100 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் இயக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.
அதைப் போலவே ரயில்வே சுற்றுலா வார நிகழ்ச்சிகள் வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
ரயில்வே சுற்றுலா வாரத்தையொட்டி நீலகிரி மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையத்திலுள்ள ரயில்வே அருங்காட்சியகம், குன்னூர் ரயில் நிலையம் மற்றும் உதகை ரயில் நிலையம் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது இரவு நேரங்களில் பார்வையாளர்களை வெகுவாக கவரும் அம்சமாகவும் மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT