வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி நெலாக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம்

வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் முழு அடைப்பு

வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சியில் வன விலங்குகளின் தாக்குதலினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில் வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
யானை, புலி போன்ற வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு,விவசாயப் பயிர்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தவேண்டும். தேவையான இடங்களில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.  வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு உடனே வழங்கவேண்டும். வன விலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தால் ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கவேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com