17 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 17 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்


நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 17 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
  மாற்றுத் திறனாளிகளும் பிறரைப்போல சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் வயது, மாற்றுத் திறனின் தன்மையைப் பொருத்துப்  பல்வேறு வகையான உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும் வழங்கப்படுகின்றன.
 இதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உதகை  அரசுத் தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு அன்றைய தினமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரையிலும் 12,882 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  2011 முதல்  2018 ஆம் ஆண்டு வரையில் 16,963 பயனாளிகளுக்கு ரூ. 21 கோடியே  41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
   மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 1,041 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சம்,  மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித் தொகையாக 15 மாணவ, மாணவியருக்கு ரூ. 45  ஆயிரம், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மானியமாக 55 பயனாளிகளுக்கு ரூ. 4.45 லட்சம், கடும் ஊனமுற்றோர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 3,896 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடி, மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் மூலம் 8,843 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி,  தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் மூலம் 175 பயனாளிகளுக்கு ரூ. 26 லட்சம்,  நான்கு வகையான திருமண 
உதவித் திட்டத்தின் கீழ் 43 பயனாளிகளுக்கு ரூ. 14 லட்சம் என பல்வேறு திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com