விவசாயிகள் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்ய தோட்டக்கலைப் பண்ணைகளில் இடம் ஒதுக்கீடு

நீலகிரி விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்ய அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில்

நீலகிரி விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்ய அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என உதகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டது. 
 நீலகிரி மாவட்ட விவசாயிகளின் குறைதீர்ப்பு நாள் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சார்ந்த விவசாயிகள்,  தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையிலான தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.  
இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் உரிய  துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் குறித்தும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 35 கோரிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. 
 இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் ஒரு ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்குவது தொடர்பான பிரேரணைஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசிடமிருந்து  ஆணை பெறப்படும் பட்சத்தில் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.  அதேபோல, விவசாயிகள் தங்கள் வசமுள்ள பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்ய தோட்டக்கலைப் பண்ணைகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
மேலும், இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்குகள் அனுபவமுள்ள விவசாயிகளையும் மற்றும் இயற்கை வேளாண் தொழிற்நுட்ப வல்லுநர்களையும் வைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும்,  விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண் விவசாயிகளைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  ஒவ்வொரு விவசாயியும் தலா ஒரு சென்ட் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்தும் தோட்டக்கலைத்துறையின் மூலம் நடத்தப்படும் கூட்டங்களிலும், பயிற்சிகளிலும் தெரிவிக்கப்பட்டு வருவதால்,  இயற்கை வேளாண்மை செய்து சான்றிதழ் பெறும் விவசாயிகள் மற்றும் குழுக்கள் அச்சான்றிதழை இயற்கை விவசாய அடையாள அட்டையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமெனவும் இக்கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com