நீலகிரி

கோத்தகிரியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

DIN

கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி  ஒன்னதலை கிராமத்தில் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தும்மனட்டி பிரதான சாலையில் இருந்து அரை கி.மீ., தொலைவில் கிராமத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்திருந்தது. அதேபோல, அரை கி.மீ., தொலைவில் உள்ள ஒன்னதலை-கோவில்மேடு குறுக்கு சாலையும் சேதமடைந்த இருந்ததால் அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர். 
இந்த இரண்டு சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன. இந்த நிதியில் கிராமத்துக்குச் செல்லும் முக்கியச் சாலையில் இரண்டு இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக, கிராமத்துக்கு செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் கான்கிரீட் போடப்பட்டது. ஆனால், மீதமுள்ள சாலையில் தார் போடப்படவில்லை. கான்கிரீட் காயும் வரை இச்சாலை மறிக்கப்பட்டு, கோவில்மேடு குறுக்கு சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பணியால், சாலையில் மண்தூசு அதிகரித்து காற்றில் புழுதி எழுவதால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையையொட்டி தேயிலைத் தோட்டங்கள் வறட்சியால் காய்ந்து, மகசூல் குறைந்துவரும் நிலையில், குறைந்த அளவில் வளர்ந்துள்ள பசுந்தேயிலையில் தூசு படர்ந்துள்ளதால், இலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
ஆகவே, சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் சாலைப் பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT