நீலகிரி

கோத்தகிரி சக்திமலை முருகன் கோயிலில் தேரோட்டம்

DIN

கோத்தகிரி சக்திமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக  நடைபெற்றது.
கோத்தகிரி சக்திமலை வெற்றிவேல் முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13ஆம் தேதி சுப்பிரமணிய மூல மந்திரமாலா பூஜை நடைபெற்றது. 
ஞாயிற்றுக்கிழமை காலை மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சூல தேவர் புறப்பாடு,  அஷ்டபலி, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகபெருமானைப் தரிசித்தனர். திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல், மகா தீபாராதனை, சுவாமி திருவீதி உலா  நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி சேவா சங்க அங்கத்தினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT