புதுப் பொலிவு பெறும் கோத்தகிரி நேரு பூங்கா

கோத்தகிரி நேரு பூங்கா பசுமைக்குத் திரும்பியுள்ளதால் தற்போது  புதுப் பொலிவுடன்  காட்சி அளிக்கிறது.

கோத்தகிரி நேரு பூங்கா பசுமைக்குத் திரும்பியுள்ளதால் தற்போது  புதுப் பொலிவுடன்  காட்சி அளிக்கிறது.
கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவில் ஆண்டுதோறும் காய்கறிக் கண்காட்சி நடத்தப்படுகிறது. தோட்டக்கலைத் துறை பராமரித்து வந்த இப்பூங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோத்தகிரி பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. 
   சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் பொருட்டு நேரு பூங்காவில் புல் தரை மிக நேர்த்தியாக வெட்டப்பட்டு, நடைபாதையின் இருப்புறங்களிலும் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரோஜா மேடையில் பல வண்ணங்களில் பூக்கும் ரோஜா நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பட்டுப்போன நாற்றுகள் தற்போது அகற்றப்பட்டு, சீசன் நாள்களில் ரோஜா செடிகள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா ஊழியர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பசுமையாகக்  காட்சி அளிக்கும் புல் தரையுடன் புதுப் பொலிவு பெற்று வரும் நேரு பூங்காவைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com