கருத்துரு சமர்ப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் கருத்துரு சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் கருத்துரு சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் வெளியூரிலிருந்து வந்து பணிபுரியும் பெண்கள், வளரிளம் பெண்கள், பெண் குழந்தைகள், சிறார்கள் ஆகியோரின் நலனுக்காக நடத்தப்படும் விடுதிகள், தமிழ்நாடு பெண்கள்-குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் சமூகநலத் துறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அரசு இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துருக்களை 30 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கருத்து சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com