கிடப்பில் போடப்பட்ட சாக்கடைக் கால்வாய் பணி: திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் சுகாதாரக் கேடு

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைக் கால்வாய் பணியால், அப்பகுதியில் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி


திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைக் கால்வாய் பணியால், அப்பகுதியில் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 10வது வார்டுக்கு உள்பட்ட பாரதி நகரில் பல லட்சம் மதிப்பில் சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டு, முழுமையடையாமல் உள்ளது. இதனால் வீடுகள் முன்பு சாக்கடைக் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பாரதி கூறியது:
500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் பாரதி நகரில் பல ஆண்டுகளாக சாக்கடைக் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகள் முன்பு சாக்கடைக் கழிவு நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலக் கோரிக்கைக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி இப்பகுதியில் சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணி தொங்கப்பட்டது. இருப்பினும் இப்பணி முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஒரு மாதமாகியும் பணி தொடங்கவில்லை.
இதனால் வீடுகள் முன்பு சாக்கடை நிரம்பி கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சாக்கடை க் கால்வாய் அமைக்கும் பணியை தாமதிக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சாக்கடைக் கால்வாய்க்கு இடையிலுள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்குமாறு மின் வாரியத்திடம் தெரியப்படுத்தியுள்ளோம். ஓரிரு நாள்களுக்குள் பணி தொடங்கி, விரைவில் முடிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com