"சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது வேதனை அளிக்கிறது'

சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருப்பது சாதனையல்ல. அது வேதனை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருப்பது சாதனையல்ல. அது வேதனை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
   இந்தியாவில் 2017 - 18ஆம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் 3.20 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது. சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வந்த பிரேசில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  நடப்பு ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் 3.55 கோடி டன்களாக உற்பத்தி உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
   இந்தியாவின் ஆண்டு சர்க்கரை தேவை 2.50 கோடி டன்களாகும். கடந்த ஆண்டு கூடுதலாக விளைந்த காரணத்தால் கரும்பு விவசாயிகளுக்கு உரிய தொகையைக் கொடுக்க முடியவில்லை. ரூ.22,000 கோடி அளவுக்கு நிலுவைத்தொகை உள்ளது. இன்று கரும்பு சாகுபடி அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்திக்கு ஆகும் செலவைவிட வெளிச்சந்தையில் கிடைக்கும் குறைவான விலையே இதற்கு காரணம். உலக அளவில் சர்க்கரைக்கு நல்ல விலை இல்லை. ஆகவே, ஏற்றுமதிக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
   பிரேசில் சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து எத்தனால் உற்பத்தியைக் கூட்டியுள்ளது. பிரேசிலைப் பின்பற்றி இந்தியாவில் உள்ள 560 சர்க்கரை ஆலைகளில் சரிபாதியை எத்தனால் ஆலைகளாக மாற்றி அதனை  அதிகமாகப் பயன்படுத்தினால் மட்டுமே இப்போதைய நெருக்கடி தீரும். சர்க்கரை உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்து விட்டோம் என்பது வேதனையாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com